முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து கிராம சாலைகளும் விரைவில் போடப்படும் கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

புதன்கிழமை, 1 மே 2019      விருதுநகர்
Image Unavailable

 ஓட்டப்பிடாரம்.  ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து கிராம சாலைகளும் விரைவில் போடப்படும் என்று கிராம மக்களிடத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீனவ, உப்பளத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் கிராமங்களில் நேற்று வாக்குகள் சேகரித்தார். வெள்ளப்பட்டி, துப்பாஸ்பட்டி, தருவைகுளம், ஏ.எம்.பட்டி, மேலமருதூர், குமாரபுரம்,  மேலஅரசரடி  உட்பட 19 கிராமங்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டரிந்தார். பல்வேறு கிராமங்களில் கிராம மக்களோடு மக்களாக அமர்ந்து கிராம மக்களிடம் குறைகளை கேட்டரிந்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார். சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என்று ஏராளமான கிராம மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். கிராம மக்களிடம் அமைச்சர் பேசும்போது, அனைத்து கிராம சாலைகளும் உறுதியாக அமைத்து தரப்படும். அனைத்து கிராம சாலைகள் அமைக்கும் பணிகளை நானே கண்காணிப்பேன். கிராம மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், மீன்பிடி தொழிலாளர்கள், கட்டுமானத் வாகதொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு எடப்பாடியார் அரசு  சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் இந்த தொகுதி மக்களுக்கு ரூ2ஆயிரம். வழங்கப்படும். ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு கொடுத்த அம்மா வழியில் செயல்படும் எடப்பாடியார் அரசிற்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
கிராம மக்கள் அனைவரும் ஒரு ஓட்டுக்கூட மாற்று அணிக்கு செல்லாத வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தின் போது அரசடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அமமுக நிர்வாகியுமான முத்துப்பாண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அமமுக நிர்வாகிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஒவ்வொறு கிராமங்களிலும் அமைச்சருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதிமுக வேட்பாளர் மோகன் உங்களது வீட்டு செல்லப்பிள்ளை என்றும் உங்களுக்காக ஓடிவந்து உதவக்கூடியவர் என்றும் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும் என்றும் கிராம மக்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சியைக் கண்ட அப்பகுதிப் பெண்கள் கூட்டமாக கூடி அமைச்சரைச் சந்தித்தனர். அவர் கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டைஇலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அங்கிருந்த பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதி பெண்கள் வெற்றிச் சின்னத்தைக் குறிக்கும் வகையில் தங்கள்  இரட்டை விரலை உயர்த்திக் காட்டி தங்கள் அனைவரது வாக்குகளும் இரட்டை இலைக்கே என்று உற்சாகத்துடன் குரல் எழுப்பினர். அமைச்சருடன் விளாத்திகுளம் சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தூத்துக்குடி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி, சாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் ஓட்டப்பிடாரம் அதிமுக நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து