முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே கழிவுகளால் நாற்றமடிக்கும் நான்கு வழிச்சாலை: சுற்றுச்சூழலை பாதுகாத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

திங்கட்கிழமை, 13 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையோரத்தில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால் நான்கு வழிச்சாலை நாற்றமடிக்கும் சாலையாக மாறி வருகிறது. இதையடுத்து நான்கு வழிச்சாலையோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போடப்பட்ட நான்கு வழிச்சாலை,பைபாஸ் சாலையாக அமைக்கப்பட்டது.தற்போது இந்த நான்குவழி பைபாஸ் சாலை குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.குறிப்பாக கோழி இறைச்சி கழிவுகள்,காய்கறி,பழக்கழிவுகள் மற்றும் இதர குப்பைகூளங்கள் நிறைந்து நான்குவழிச்சாலை நரகவழிச்சாலையாக மாறியுள்ளது.மேலும் தனியார் சமையல் எண்ணை தயாரிப்பு ஆலைகளில் கெட்டுப்போன மற்றும் கழிவான சமையல் எண்ணையை டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான லிட்டர் கணக்கில் கொட்டிச் செல்லும் பகுதியாகவும் திருமங்கலம் நான்குவழி பைபாஸ் சாலை மாறி வருகிறது.
திருமங்கலம் நகரிலுள்ள கோழி,மீன் மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகளில் தினம் தோறும் சேர்ந்திடும் கழிவுகள் அனைத்தும் மூடைகளாக கட்டப்பட்டு திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையோரம் வீசப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.அதே போல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சேர்ந்திடும் கழிவுப் பொருட்களும் மூடைகளாக கட்டப்பட்டு நான்கு வழிச்சாலை ஓரங்களில் வீசப்படுகிறது.மேலும் பாலித்தீன் கழிவுகள்,உடைந்த பாட்டில்கள், கண்ணாடி பொருட்கள்,செயலிழந்த டியூப் லைட்கள் என சுற்றுச்சூழலுக்கு ஆபத்தினை விளைவிக்கக்கூடிய நச்சுநிறைந்த கழிவுப் பொருட்களும் சாலையோரங்களில் மலைபோல் குவிக்கப்படுகிறது.இதனிடையே தினம் தோறும் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் மலைபோல் குவிந்து அழுகியநிலையில் அந்த பகுதி முழுவதிலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக அவ்வழியாகச் சென்றிடும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி மூக்கைப்பிடித்தபடி செல்லவேண்டியுள்ளது.
திருமங்கலம் நகரின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்திடும் குண்டாற்றுக்கு மிகவும் அருகில் கொட்டப்படும் இந்த கழிவுகளால் அப்பகுதியின் சுற்றுச்சூழலும் நீராதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் மற்றும் திருமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து நான்கு வழிச்சாலையோரம் கழிவுகளை கொட்டிச் சென்றிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.....
படங்கள் நெட்டில் உள்ளது.... படவிளக்கம்: தேவையில்லை....

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து