ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ. ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      இந்தியா
Jet-Airways-2019 05 14

புது டெல்லி, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சி.இ.ஓ. அமித் அகர்வால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. பணப் பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சி.இ.ஓ. அமித் அகர்வால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து