திருஞான சம்பந்தர் குருபூஜை விழா மதுரை ஆதீனத்தில் நாளை துவக்கம்

புதன்கிழமை, 15 மே 2019      மதுரை
15 madurai aathinam

மதுரை,- திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா 5 நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடக்கிறது.
சைவ சமய குரவர் நால்வரின் முதல்வரும், தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவருமான திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா வரும் 17-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 18-ம் தேதி முருகர் பூஜையும், 19-ம் தேதி திருஞானசம்பந்தர் திரு அவதாரம் செய்த திருநாளும் நடக்கிறது. அன்று காலை 11 மணியளவில் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் எழுந்தருளி திருக்கண் சாத்துதல் நடைபெறுகிறது.
20-ம் தேதி காலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரை ஆதீனத்தில் எழுந்தருளி திருக்கண் சாத்திய பிறகு ஆதீன மடத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஞானப்பால் அருந்தும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், யானை, ஒட்டகம், மேளதாள பரிவாரங்களுடன் மதுரை ஆதீனத்தை கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அனைத்து சன்னதிகளிலும் மதுரை ஆதீனம் வழிபாடு செய்கிறார். பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு அலங்காரங்கள் செய்வித்து தீபாராதனை நடைபெறும்.
பின்னர் ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து மதுரை ஆதீன கொலு மண்டபத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருள்கிறார். அங்கு திருமறை, வேத பாராயணங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன் பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 62 நாயன்மார்கள் அடங்கிய சப்பரங்கள் மதுரை ஆதீனத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் திருஞான சம்பந்தர் பெருமானையும் 62 நாயன்மார்களையும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழி அனுப்பி வைத்து விட்டு ஆதீன மடத்தில் வைகாசி மூல குருபூஜை நடக்கிறது.
இந்த சிறப்பு பூஜையில் திருஞான சம்பந்தர், தனது துணைவியார் தோத்திர பூரணாம்பிகையோடு சிவ ஜோதியில் ஐக்கியமாகிறார். அதன் பின் மதுரை ஆதீனம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி மாகேஸ்வர பூஜையில் கலந்து கொள்ள ஆணை பிறப்பிக்கிறார். இரவு 7 மணிக்கு மீண்டும் மதுரை ஆதீனம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி கோ ரதத்தை ஆவணி மூல வீதி வழியாக எழுந்தருள செய்கிறார். மதுரை ஆதீன மடத்தை அடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து