வரலாற்று ஆசிரியர் கமல்ஹாசன் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : வரலாற்று ஆசிரியர் ஆகி விட்டார் நடிகர் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் நேற்று நிருபர்களுக்கு

பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் கமிஷனில் நடக்கும் பிரச்சனை குறித்து பொதுவாக அரசியல் கட்சியினர் கருத்து சொல்ல முடியாது. நகைச்சுவையாக குறிப்பிட வேண்டும் என்றால் அவர்களுக்கே தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது. அவர்களின் அதிகாரத்தில் அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. எந்த ஒரு அரசியல்வாதியும் மக்களை நம்பி இருக்க வேண்டும். மதத்தை நம்பி இருக்க கூடாது. ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டுமா? மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உருப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து