முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ராஜீவ்காந்தியின் 28வது நினைவுதினம்: மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி தலைமையில் காங்கிரசார் மௌன ஊர்வலம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி தலைமையிலும்,மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மௌன ஊர்வலம் நடத்தி அமரர் ராஜீவ்காந்தியின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்திடும் நிகழ்ச்சி திருமங்கலம் நகரில் நேற்று மாலை நடைபெற்றது.இதையொட்டி உசிலம்பட்டி சாலை வி.எஸ்.ஆர் மஹாலிலிருந்து மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி தலைமையிலும்,மாவட்டத்தலைவர் ஆர்.ஜெயராம் முன்னிலையிலும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட மௌனஊர்வலம் நடைபெற்றது.அமரர் ராஜீவ்காந்தியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்துடன் கூடிய வாகனம் முன்னே சென்றிட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த மௌனஊர்வலம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பாக முவடைந்தது.பின்னர் அங்கு நடைபெற்ற ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜெயராம் கொடுஞ்செயல்எதிர்ப்பு உறுதிமொழியினை வாசிக்க அதனை கட்சி நிர்வாகிகள் திரும்பக்கூறி உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.பின்னர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ராஜீவ்காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நகர் தலைவர் தாமோதரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அம்மாபட்டி பாண்டியன்,பிருதிவிராஜ்,ராஜ்குமார்,வட்டார தலைவர்கள் புதுராஜா, இளங்கோவன்,தளபதிசேகர்,சுப்பிரமணி,மனித உரிமைகள்பிரிவு மாநில பொதுச் செயலாளர் சைமன் பல்தேசிங்,எழுமலை கணேசன்,உசிலை பொறுப்பாளர் மகேந்திரன், பொன்.மணிகண்டன்,இளங்கோவன்,பிரபாகரன்,ரமேஷ்பாபு,விஜயகாந்த்,மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து