முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை - பினராயி விஜயன் வேதனை

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை எதிர்பார்க்கவில்லை என கேரல முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி செய்யும் கேரளாவில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலப்புழா தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது.
 
இந்த தோல்வி எதிர்பாராதது என முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மேற்கொண்ட நிலைப்பாடு, மாநிலத்தில் பா.ஜனதா எந்த தொகுதியையும் பெற முடியாத நிலையை ஏற்படுத்தியது. இந்த பின்னடைவு குறித்து கட்சி விரிவாக மறு ஆய்வு செய்யும்’ என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி மாநிலத்தில் படுதோல்வி அடைந்திருப்பதால், முதல்-மந்திரி பினராயி விஜயன் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து