கடும் வெப்பம்: உ.பி.யில் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு - தமிழகத்தை சேர்ந்தவர்கள்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
summer heat 2019 05 22

புது டெல்லி : உத்தர பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பயணம் மேற்கொண்டனர்.

ரயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கும் ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் விவரம்: பச்சைய்யா (வயது 80) பாலகிருஷ்ண ராமசாமி (வயது 69) தனலட்சுமி (வயது 74) சுப்பராய்யா (வயது 71). தெய்வானை (வயது 71) மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தவர்களுக்கு ஜான்சி அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் பயணித்த போது வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து