கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi meet governor 2019 06 12

சென்னை : தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனில் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பன்வாரிலால் புரோகித் தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி ராஜ்பவனில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, டி.ஜி.பி. நியமனம், தலைமைச் செயலாளர் நியமனம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கவர்னருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கவர்னருடனான ஆலோசனையின் போது அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து