முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுடன் கூகுள் சி.இ.ஒ.

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

இந்தியா-இங்கிலாந்து அணிகள் பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஜெசன் ராய்(66), பாரிஸ்டோவ்(111), ஸ்டோக்ஸ்(79) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 337 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. பின்னர் ஒரளவு நிலைத்து ஆட முற்பட்டது. இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 306 ரன்கள் குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியை நேரில் காண கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை நேரில் வந்துள்ளார். இது தொடர்பான நிழற்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில். “இன்றைய போட்டியில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் சச்சின் ஆகிய இருவரும் ஒன்றாக மைதானத்தில் இருந்தனர்” எனப் பதிவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து