முடிவுக்கு வந்தது கைதிகள் பரிமாற்ற சர்ச்சை மசோதா - ஹாங்காங் நிர்வாக தலைவர் அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2019      உலகம்
Hong Kong Chief Executive 2019 07 10

ஹாங்காங் : சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்து விட்டது என்று நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை மக்கள் ஏற்காமல் இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ஹாங்காங் நிர்வாகம் பணிந்தது. மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும் மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். இது ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு பெருத்த தலைவலியை கொடுத்து வந்தது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

அந்த மசோதா விஷயத்தில் அரசாங்கத்தின் நேர்மை குறித்து இன்னும் சந்தேகப்படுகிறார்கள். சட்டசபையில் மீண்டும் அந்த மசோதா தொடர்பான பணியில் ஈடுபடுவார்களா என்று சந்தேகிக்கிறார்கள். நான் வலியுறுத்தி சொல்கிறேன். அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என்று கூறினார்.

இதையடுத்து ஹாங்காங் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்னும் எங்களது 5 கோரிக்கைகளுக்கு நிர்வாக தலைவர் கேரி லாம் மற்றும் அவருடைய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று போராட்ட அமைப்பான சிவில் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து