முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிட ஜனாதிபதி விருப்பம்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை ஐகோர்ட் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமாணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சதாசிவம், எஸ்.ஏ.பாப்டே, தஹில்ரமாணி ஆகிய 3 நீதிபதிகளுக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை ஜனாதிபதி வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது, 

தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட ஐகோர்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017-ம் ஆண்டு முன்வைத்தேன். இந்த ஆலோசனையை சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில ஜகோர்ட்களில் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், கேரள ஐகோர்ட்டில் மலையாளத்திலும், சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை தமிழிலும் கிடைக்க செய்யலாம். வாய்தா எனும் சட்டக்கருவி அவசர கால பயன்பாட்டிற்குப் பதிலாக, வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால், அது குடியரசு முறையையே பரிகசிப்பதாக ஆகி விடும். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து