முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு: மத்திய அரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர். இதையடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் என்ற தகுதி தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளில் மருத்துவம் படித்து விட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து விட்டு இந்தியா வருபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் எப்.எம்.ஜி.இ. என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும்.

பின்னர் நீட் தேர்வு எழுதி மருத்துவ மேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து விட்டு வருபவர்கள் இனிமேல் எப்.எம்.ஜி.இ தேர்வை எழுத தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து