முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நலனுக்காக துணை ஜனாதிபதி தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுவார்: துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாட்டின் நலனுக்காக துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தொடர்ந்து பாடுபடுவார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த எம்.ஜி.எம். ஹெல்த் கேர் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவம் பெறுவதற்காக மக்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். அதனால் உலகின் நல்வாழ்விற்கான சுற்றுலாவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. ஜெயலலிதாவின் பாதையை பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் தரமான மருத்துவத்தை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். உயர்தர மருத்துவ சேவைகளுக்கும் மனித வள ஆதாரமாக உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

சுகாதார துறையில் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சீரிய முறையில் செயலாற்றி வருகிறார். துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்த போது, தமிழ்நாட்டுக்கு துணையாக இருந்தார்.  அவர் துணை ஜனாதிபதி, தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுவார் என்று நம்புகிறேன். 

தமிழக கவர்னர் பன்வாரிலால் தமிழகத்திற்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். இந்த எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவ மையம், அவசர சிகிச்சை மருத்துவம், உயிரி மருத்துவம், சுற்றுலா மருத்துவம், பாதுகாப்பு மருத்துவம், லேசர் மருத்துவம், வலி மேலாண்மை மருத்துவம், விளையாட்டு மருத்துவம் முதலான அனைத்து வகை மருத்துவங்களின் பயன்களை மக்களுக்கு வழங்கும் ஆலயமாகத் திகழ்ந்திட வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து