முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை: எடப்பாடி- ஓ.பி.எஸ் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இன்று பக்ரீத் பண்டிகை.நாடெங்கும் கொண்டாடப்படுகிறது இதையொட்டி, இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அந்த வாழ்த்து செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இறைவனின் கட்டளையை ஏற்று, தன் தனயனையே இறைவனுக்கு அர்ப்பணிக்கத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள். அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள். எளியவர்களிடம் கருணை காட்டுங்கள். சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி வளம் பெருகும்.

விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்து இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மீண்டும் எங்களது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து