கேரள மழை பாதிப்பு: வயநாட்டில் மக்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Rahul chatting comfort Wayanad people 2019 08 11

வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.  மழையால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிய கோழிக்கோடு, ஆழப்புழா மாவட்டங்களில் நேற்று  காலை இரு உடல்கள் மீட்கப்பட்டன. மலப்புரத்தில் உள்ள புதுமலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருக்கிறார்கள் என்பதால் அங்கு தேடுதல் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த 1.65 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு, 1,318 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதியை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக கேரளா சென்ற அத்தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.  நிலம்பூர், மாம்பாட், எடவனப்பாரா ஆகிய நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை அவர் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து