முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா பா.ஜ.க.வில் இணைந்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வான கபில் மிஸ்ரா (கரவால் நகர் தொகுதி), சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த சபாநாயகர், எம்.எல்.ஏ. கபில் மிஸ்ராவை சமீபத்தில் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கபில் மிஸ்ரா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, விஜய் கோயல் ஆகியோர் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். அவரை பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து