முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக வந்துள்ள செய்தியை குறிப்பிட்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி பணியாளர்களை வேலையை இழக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பது, வாகனங்களுக்கான விலை உயர்வு, அதிகப்படியான சுங்கக் கட்டணம், வாடகைக்கார்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் இந்தியாவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வாகன உற்பத்தியை குறைந்துக் கொண்டுள்ளன. இதனால் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்துள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்து கொள்வது, பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது மற்றும் பணியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. வெல்டிங், வார்ப்பு, உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கடும் நெருக்கடியில் தவித்து வருகின்றன.

உற்பத்தி செய்த வாகனங்கள் தேங்கியதால் அவற்றை வாங்கி விற்பனை செய்யும் டீலர்ஷிப் நிறுவனங்களை கடுமையாக பாதித்தன. இதனால் நிறைய வாகன விற்பனை ஷோரும்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வரும் கடும் வீழ்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதே போக்கு இன்னும் 3, 4 மாதங்கள் நீடித்தால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வேலை இழக்கும் ஏபாயம் ஏற்படும் என வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்த விஷயத்தில தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து பெரிய அளவில் கோரிக்கைகள் வரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் மாபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்க பதிவில், இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் அடுத்த காலாண்டில் வாகனத் தொழில் உற்பத்தியில் 5 லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும். இதுவொரு எச்சரிக்கை மணி. தமிழகம் ஆட்டோ மொபைல் துறை சார்ந்து இயங்குகிறது. மத்திய அரசு போதிய நிதி மற்றும் பிற சலுகைகளை அறிவித்து அவர்களின் வேலையை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து