முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்காவில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்பு - முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

தொழில் முதலீடுகளை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமெரிக்கா சென்றார். நியூயார்க் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் தொழில் முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகதத்தில் தொழில் துவங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோரும் இணைந்து கொள்கிறார்கள்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக லண்டனில் இருந்த போது அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையை முதல்வர் பார்வையிட்டார். இந்த மருத்துவமனையில் உள்ளது போல தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று அப்போது முதல்வர் தெரிவித்தார். அமெரிக்கா புறப்படும் முன் லண்டனில் உள்ள தாவரவியல் பூங்காவையும் முதல்வர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து