முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் விழா துணைவேந்தர் மு.கிருஷ்ணன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

 மதுரை, -மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பனை விதை நடவு மற்றும் மரக்கன்று நடும் விழாவை துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் 3000 பனை விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டன. மரக்கன்று நடும் நிகழ்வு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மற்றும் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தொடர்பியல் துறை மாணவர்களும் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் பனை விதைப்பு மற்றும் குறுங்காடு உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வரும் விவேகானந்தன், சோலைவனம் வி.சி. முருகு பூவலிங்கம், அன்புடன் அறம் செய் ஈரோடு த. பாலகிருஷ்ணன், நீர்நிலைகள் அமைப்பு அபூபக்கர், பனையோலை மணிவண்ணன் ஆகியோர் மரக்கன்று வழங்கினர். இவர்களுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி அறிவழகன், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மதுரை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஹரிபாபு, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேராசிரியர்கள் நாகரத்தினம், சந்திரசேகர், அசோக், ஆனந்த் மற்றும் 300 மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் பேசியதாவது:-
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எவ்வாறு நாம் முயற்சி செய்கிறோமோ அது போல் மரக்கன்று நடுவதற்கும் நாம்  முயற்சிகள் செய்ய வேண்டும்.மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நாம் மரங்கள் அதிகமாக நட வேண்டும்.மரம் நடுவது எளிது அதை பராமரித்து வளர்ப்பது கடினம் என்பதை மனதில்கொண்டு மாணவர்கள் மற்றும் அனைவரும் மரம் வளர்ப்பதில் நாட்டம் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து