முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையுடன் மாணவன் உதித் சூர்யா மதுரை சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக ,சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் (வியாழன்) மாலை மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் தேனி சிறையில் அடைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் அரசு மருத்துவர் என்பதால் அவருக்கு சிறையில் ஏ கிளாஸ் அறை பெறும் தகுதியிருக்கிறது.
அதன் அடிப்படையில் மருத்துவர் வெங்கடேசனும் அவரது மகன் உதித் சூர்யாவும் நள்ளிரவில் தேனியிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து