சீன அதிபர் வருகை: 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
chinese president-tn govt 2019 10 09

சென்னை : சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு 34 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நாளை (11-ம் தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வர இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக 34 சிறப்பு அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து