முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு வலிமையையும், வடிவத்தையும் அளித்தவர்: எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பா.ஜ.க.வுக்கு வலிமையையும், வடிவத்தையும் அளித்தவர் அத்வானி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி நேற்று தனது 92-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்கள் உட்பட பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். அத்வானி பல வருடங்களாக உழைத்து பா.ஜ.க.வுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர். பல வருடங்களாக நமது கட்சி இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் துருவமாக உருவெடுத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் அத்வானி போன்ற தலைவர்கள்தான். அத்வானியைப் பொறுத்தவரை பொதுச் சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது. இதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை. அமைச்சராக இருந்த போது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து