முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சர்க்கரை பால் பிரசாதம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்த காய்ச்சிய பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  

கோவில்களில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் நடைமுறை தமிழகத்தில் தற்போது தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த இலவச பால் பிரசாதம் வழங்கப்படுகிறது. 
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக மூலவர் கரத்தில் உள்ள தங்கவேலுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக பால் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனை செவ்வாய்க்கிழமைதோறும் காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்து காய்ச்சிய பாலாக வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த காய்ச்சிய பால் வினியோகம் செய்யப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் முருகனை வழிபட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து