முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் : பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வடகிழக்கு பருவமழை மற்றும் குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை நீடித்தது. குறிப்பாக அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு -1 அணை பகுதியில் 8.4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. அணை பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் மொத்த நீர்மட்டம் 48 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 1985 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுவதாலும், சிற்றாறுகளில் இருந்து வரும் தண்ணீர் கலப்பதாலும், கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க நேற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல குழித்துறை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து