லாராவின் சாதனையை முறியடிப்பேன்: வார்னர்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      விளையாட்டு
Lara-Warner 2019 12 05

மெல்போர்ன் : டெஸ்டில் 400 ரன் குவித்த லாராவின் சாதனையை ஒருநாள் முறியடிப்பேன் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த சாதனை வீரர் பிரைன் லாரா. வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 400 ரன் குவித்து இந்த சாதனையை படைத்து இருந்தார். லாராவின் இந்த சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கேப்டன் டிம் பெய்னின் முடிவால் இந்த வாய்ப்பு பறிபோனது. பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டுவில் சமீபத்தில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்து இருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். வார்னர் மிகவும் நல்ல நிலையில் இருந்ததால் 400 ரன்னை எடுக்க வாய்ப்பு இருந்தது. கேப்டனின் முடிவால் அவர் 335 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் லாரா 400 ரன் குவித்த சாதனையை ஒருநாள் முறியடிப்பேன் என்று வார்னர் கூறினார். இதற்கான மற்றொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 335 ரன் குவித்த வார்னரை, லாரா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். லாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வார்னர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். லாராவின் சாதனையை இந்திய வீரர் ரோகித்சர்மா முறியடிப்பார் என்று வார்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து