முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது சவுதியின் அராம்கோ

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

பிரிட்டோரியா : உலகின் மிக பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ தட்டி பறித்து விட்டது.

சவுதி அரேபியாவின் அரசு நிறுவனமான அராம்கோ 2 லட்சம் டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்து உலகின் முதல் பெரும் நிறுவனமாக மாறி உலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. சவுதி அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எரிப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. முதன் முறையாக பங்கு வர்த்தகம் மூலம் பெரும் நிதியை திரட்டியத்தின் மூலமாக அராம்கோ இந்த முதலிடத்தை அடைந்துள்ளது.

ஆப்பிளின் வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் பங்கு சந்தை வரவு மூலம் அராம்கோவின் வர்த்தக மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்து விட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உலகின் அதிக சந்தை மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிளும், அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில மைக்ரோசாப்ட் நிறுவனமும் இருந்தன. சந்தை வர்த்தகம் வாயிலாக ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டை திரட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமை ஆப்பிளுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அராம்கோவின் இந்த சந்தை மதிப்பு மூன்றாம் உலக நாடுகளின் ஜி.டி.பி. மதிப்புக்கு நிகரானது. மேலும் அமேசான், பேஸ்புக், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பை இணைத்தாலும் அது அராம்கோவின் மதிப்பு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனம் ஒரு நாட்டின் ஜி.டி.பி. மதிப்பை விட அதிகமாக சந்தை மதிப்பு கொண்டிருப்பது உலக வர்த்தக சந்தையையே வாய்பிளக்க வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து