பொருளாதார பிரச்சினைகளை பேச நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் ராகுல்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      இந்தியா
Rahul-Gandhi 2020 01 22

பொருளாதார பிரச்சனைகள் பற்றி பேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ராஜஸ்தானில் வருகிற 28-ம் தேதி முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். வருகிற 28-ம் தேதி முதல் அவர் பொதுக்கூட்டத்தை தொடங்குகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த கூட்டம் நடக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் கடந்த சில மாதங்களாக கடும் மந்தநிலை நிலவுகிறது. அது போல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த இரு பிரச்சனைகள் பற்றி மக்களிடம் பேச ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்காகவே அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் மக்களை சந்தித்து பேச ராகுல் வியூகம் வகுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் அவர் விவசாயிகள், பழங்குடி இன மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வணிகர்கள், வியாபாரிகள், சிறு-குறு தொழில் அதிபர்களை ராகுல் சந்திக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து