முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியனின் மேற்பரப்பை காட்டும் புகைப்படங்கள் வெளியீடு

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

சூரியன் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டும் மிகவும் துல்லியமான புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. ஹவாயில் உள்ள டேனியல் கே இனோய் சோலார் தொலைநோக்கி, சூரியனை முழுவதும் 30 கிலோ மீட்டர் பரப்பில் சிறிய அம்சங்களை காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாயில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொதிநிலையில் உள்ள பாத்திரத்தில் வறுபடும் பாப்கார்ன் போல சூரியனின் மேற்பரப்பு காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, சுமார் 1.4 மில்லியன் கிலோ மீட்டர் விட்டம் மற்றும் பூமியிலிருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள நட்சத்திரமான சூரியனின் படங்களை படம் பிடித்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

இந்த செல் போன்ற கட்டமைப்புகள் தோராயமாக அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் அளவு இருக்கும். அவை சூடான வாயு அல்லது பிளாஸ்மாவின் நிறையைக் கடத்துகின்றன. இந்த சூரிய பொருள் உயரும் இடத்தில் பிரகாசமான மையங்கள் உள்ளன. சுற்றியுள்ள இருண்ட பாதைகள் பிளாஸ்மா குளிர்ந்து மூழ்கும் இடமாகும். அவ்வகையில் டேனியல் கே இனோய் சோலார் தொலைநோக்கி சூரியனின் படங்களை பிடித்துள்ளது. இதனை அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகமை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிகப்பெரிய சூரிய தொலைநோக்கியான டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கியின் மூலம் சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து