முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை.  தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். அதேபோன்று, பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது  என்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சீனாவின் உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.  இந்த வைரஸ் காய்ச்சல்  சீனாவின் பிற பகுதிகள் மட்டுமல்லாது உலக நாடுகள் சிலவற்றிலும் பரவியது.  இதற்கிடையில் நேற்று சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் உகான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3,223 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் பொழுது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். இதே போன்று, பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து