3 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர் எடப்பாடிக்கு விஜயகாந்த் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      தமிழகம்
Vijayakanth 2020 02 16

Source: provided

சென்னை : தமிழக முதல்வராக 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்வதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டு காலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தே.மு.தி.க. சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து