முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
OPS 2024-03-27

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்று செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து