முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      விளையாட்டு
Rudraaj-Gaekwad 2023-12-02

Source: provided

குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:- பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது. 

சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார். ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

_______________________________________________

வைரலாகும் டோனி வீடியோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தின ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.சேசிங்கில் குஜராத் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மிட்செல் பந்து வீச்சை எதிர்கொண்டார் விஜய் சங்கர். இந்த பந்து அவரது பேட்-இல் டிப் ஆகி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக மாறியது. கீப்பிங்கில் நின்றிந்த எம்.எஸ். டோனி தன்னை விட பந்து சற்று விலகியே சென்ற போதிலும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

இந்த சீசன் துவங்கும் முன்பிருந்தே, எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரோ என்ற பேச்சும், அவரது உடல்நிலை குறித்த சந்தேகமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், எம்.எஸ். டோனியின் கேட்ச் அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

_______________________________________________

தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மகளிரி கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த், கார்ட்னெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 93 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து