முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      இந்தியா
Vote 2024-01-05

புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 89 மக்களவை தொகுதிகளில் நேற்று மனு தாக்கல் தொடங்கியது. 

தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினத்துடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. 

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், கேரளாவில் உள்ள 20 எம்.பி. தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.  ஏப்ரல் 4-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 5-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 8-ம் தேதியாகும். 

இன்று 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 

கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ம் தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து