முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      உலகம்
UNO-2023 04 06

Source: provided

நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா.  சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதனிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில், ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, 

தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து