முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Modi-Bill-Gates 2024-03-29

புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவைப் போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் டீப் பேக் தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடும். 

உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம். இந்த டீப் பேக் வீடியோ அல்லது ஆடியோ ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. 

இத்தகைய நடைமுறைகளை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக் கூடியது, செய்யக் கூடாததை நாம் வரையறுக்க வேண்டும்.  இது போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பம் போதிய பயிற்சி இல்லாத நபர்களிடம் சென்றடையும்போது, அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். 

இதையடுத்து பில்கேட்ஸ் கூறுகையில், 

ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கக் கூடியது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து