முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      அரசியல்
Murugan 2023 04 02

நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். 

கடந்த 25-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் எந்தவித முன் அனுமதியுமின்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் தேனாடுகம்பை போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து