முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா: வரும் 7 - ல் கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 27 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவுக்கான வாஸ்து சாந்தி வரும் 6 ம் தேதி மாலை நடைபெறுகிறது. 7 ம் தேதி கோயிலில் சுவாமி சன்னதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.  இதையடுத்து தினமும் சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். 14 ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 15 ம் தேதி திக்விஜயமும் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 16 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து 17 ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

18 ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் தேர்த்தடம் பார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. 

மதுரை அருகே உள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வரும் 16 ம் தேதி மாலையில் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 17 ம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சியும், இரவு தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் தங்கி தங்கக் குதிரையில் எழுந்தருளும் கள்ளழகர் 18 ம் தேதி காலையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 18 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்