முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் விளையாட்டு போட்டி காண்ட்ராக்ட் விடுவதில் தாமதம் சுங்குலு கமிட்டி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 30  - காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை காண்ட்ராக்ட் விடுவதில் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடு கமிட்டி மற்றும் சில அதிகாரிகள் மீது சுங்குலு கமிட்டி குற்றஞ்சாட்டி உள்ளது. இந்தியாவுக்கு பெருமை தரக்கூடும் என்று கருதி கடந்த அக்டோபர் மாதம் புதுடெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் சுமூகமாக நடந்து முடிந்தது. இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனை அதிகரித்தது. அதேசமயத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு விளையாட்டு போட்டி கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி மற்றும் சில அதிகாரிகள் ஊழல் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதோடு பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தியது. இதில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிகிறது. 

இந்த ஊழல் குறித்தும் நிர்வாக கோளாறு குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் சுங்குலு தலைமையில் ஒரு உயர்மட்ட கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி அமைத்தார். இந்த கமிட்டியானது விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல்கள் மற்றும் நிர்வாக கோளாறுகள் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடுகளை செய்வதில் காண்ட்ராக்ட் தாமதமாக விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் விளையாட்டு போட்டி அமைப்பு கமிட்டி மற்றும் பல அதிகாரிகளும்தான் காரணம் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. மேலும் காண்ட்ராக்ட் விடப்பட்டது தொடர்பான பல தஸ்தாவேஜூகளை காணவில்லை என்றும் சில தஸ்தாவேஜூகள் போலியாக இருக்கின்றன என்றும் சிலவற்றில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுங்குலு கமிட்டி கூறியிருப்பதாக தெரிகிறது. 

மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா,2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடான வழியில் ஏலம் விட்டதில் அவர் ரூ. 3 ஆயிரம் கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி வரை அவரால் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயத்தில் காமன்வெல்த் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதை முதலில் வெளிக்கொணர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர். ராசாவும், மணி சங்கர் அய்யரும் தமிழ்நாட்டைத்தான் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இருவரும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் அப்படி இருக்கிறார். மற்றொருவர் இப்படி இருக்கிறார். பதவிக்கு யாரும் வரலாம். ஆனால் அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். சேவை செய்பவர்களாக இருக்கு வேண்டும். சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்