முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நடவடிக்கை: மன்மோகன் - ஒபாமா ஒப்புதல்

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.17 - உலக பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அதிபர் ஒபாமாவுக்கும் இடையே விரிவான முறையில் கருத்து ஒற்றுமை நிலவும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள லாஸ்கபோஸ் நகரில் நாளையும் நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டில் உலக பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த விஷயத்தில் அதிபர் ஒபாமாவுக்கும் மன்மோகன் சிங்கிற்கும் இடையே கருத்து ஒற்றுமை இருக்கும். அதில் எந்தவித மாறுதலும் இல்லை என்று வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்