முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்பு இரட்டையரில் பயஸ் ஜோடிக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 10 - இங்கிலாந்தில் நடைபெற்று வந்த விம் பிள்டன் டென்னிஸ் போட்டியின் கல ப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றி ல் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற் றும் வெஸ்னினா ஜோடி போராடி தோல்வி அடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் லியாண்டர் பயஸ் மற்றும் வெ ஸ்னினா ஜோடியும், மைக் பிரையான் மற்றும் லிசா ரேமண்ட் இணையும் பட்டத்திற்காக மோதின. 

இந்த இறுதிச் சுற்றில் லியாண்டர் மற் றும் வெஸ்னினா ஜோடி வெற்றி பெற் று இருந்தால் அந்த ஜோடி இணைந்து பெற்ற முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாக இருந்திருக்கும். இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டி இங்கிலாந்து நாட்டின் தலை நகரான லண்டன் அருகே கடந்த 2 வார காலத்திற்கும் மேலாக நடந்து வந்தது. 

இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற் றும் வெஸ்னினா ஜோடியும், அமெரிக் க இணையும் மோதின. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில், அமெரித்காவின் மைக் பிரையான் மற்றும் லிசா ரேமண்ட் இணை அபார மாக ஆடி, 3 -6, 7 -5, 4 -6 என்ற செட் கணக்கில் இந்திய மற்றும் ரஷ்ய ஜோடி யை வீழ்த்தி பட்டத்தை தனது வசமாக் கியது. 

இந்தப் போட்டியில் கடுமையாக போ ராடி தோல்வி அடைந்த இந்திய மற்று ம் ரஷ்ய ஜோடி ரன்னர்ஸ் அப் பட்டத் துடன் திருப்தி அடைய வேண்டியதாயி ற்று. இந்தப் போட்டி இரண்டு மணி நேரம் மற்றும் 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மைக் பிரையான் மற்றும் லிசா ரேமண்  ட் இணை 2-ம் நிலை ஜோடியாகும், இதில் தோல்வி அடைந்த இந்திய மற் றும் ரஷ்ய ஜோடி 4 -ம் நிலை ஜோடி யாகும். 

இந்த சீசனில் லியாண்டர் மற்றும் எலீ னா ஜோடி 2-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் நடந்த ஆஸி. ஓபன் இறுதிச் சுற் றில், பெத்தானி மேடக் மற்றும் டெக் காவு இணையிடம் தோற்றது. 

சமீபத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் பயசு டன் ஜோடி சேர்வது யார் என்ற பிரச்சி னை எழுந்தது. இது இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. 

இறுதியில் ஒரு வழியாக இந்தப் பிரச்சி னக்கு சங்கம் தீர்வு கண்டது. லண்டன் ஒலிம்பிக்கிற்கு இரட்டையர் பிரிவில் இரண்டு ஜோடியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

இருந்த போதிலும், ஜூனியர் வீரரை தனக்கு ஜோடியாக நிமியமித்தது குறி த்து பயஸ் கண்டனம் தெரிவித்தார். இத ற்கு இடையே லியாண்டர் ஜோடி விம் பிள்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை பயஸ் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்று இருதிகிறார். அவர் 13 கிராண்ட் ஸ்லா ம் பட்டம் பெற்று இருக்கிறார். இதில் 6 பட்டம் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற பட்டங்களாகும். 

இந்த இறுதிச் சுற்றில் லியாண்டர் மற் றும் வெஸ்னினா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முக்கி யமாக வெஸ்னினாவின் சர்வீஸ் வெகு நேர்த்தியாக இருந்தது. ஆனால் அமெரி க்க ஜோடி இதனை விட சிறப்பாக ஆடி பட்டத்தை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்