முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் பங்களிப்பு முக்கிய காரணம் - ஸ்ரீகாந்த்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். - 5 - 1983 -ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மொகிந்தர் அமர்நாத் முக்கிய பங்கு வகித்ததைப் போல 2011 -ம் ஆண்டில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னா ள் கேப்டனான ஸ்ரீகாந்த் கூறினார். 1983 -ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமை யிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் இடம் பெற்று இருந்தார். மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிக ரன் எடு த்தவர் இவர் தான். தற்போது ஸ்ரீகாந்த் தேர்வுக் குழுத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா உலகக் கோப்பையை வென்றதால் முன்னாள் கேப்டனும், தேர்வுக் குழுத் தலைவருமான ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியில் உள்ளார். அவர் இந்த வெற்றி குறித்து தெரிவித்தாவது - 

1983  - ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தேன். தற்போது தேர்வுக் குழு தலைவராக இருக்கிறேன். இத னால் உலகக் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக் கு இருந்தது. கடந்த 2 ஆண்டு காலமாக சிறப்பாக விளையாடி வந்த து. 1983 - ல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன்பு இந்திய அணி மீது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. 

ஆனால் தற்போது போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை வீரர்கள் பூர்த்தி செய்தனர். 1983 -ல் மொகிந்தர் அமர்நாத்தின் பங்களிப்பு எப்படி முக்கியத்துவம் பெற்று இருந்ததோ அதே போல உலகக் கோப்பையை வென்ற இந்தி ய அணியில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு இருந்தது. 

அவர் பேட்டிங், பந்து வீச்சில் முத்திரை பதித்தார். பகுதி நேர பெளல ராக இருந்த அவர் முழு நேர பெளலராக மாறி விட்டார். இனி இந்திய அணியில் அவர் முழு நேர பெளலராக இருப்பார். இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார். 

மும்பையில் நடைபெற்ற 2011 -ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 29 ரன் வித்தியாசத்தில் இலங்கை யை வீழ்த்தி 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்