முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி பட்டம் வென்றார்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லாஸ்வேகாஸ், டிச.21 - அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் 2012-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 89 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில கலந்துகொண்டர். கடந்த 2 மாதங்களாக அழகியைச் தேர்ந்தெடுக்க  பல்வேறு சுற்று போட்டிகள் நடைபெற்றன. 

இந்தியா சார்பில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சில்பா சிங் பங்கேற்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  இவர்பணியாற்றி வருகிறார். இறுதிச் சுற்றுக்கு 16 நாடுகளின் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில் சில்பாவும் ஒருவராகத் தேர்வாகியிருந்தார். 16 நாடுதளின் அழகிகளிலிருந்து, 10 நாட்டு அழகிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர். அதில் சில்பா சிங் தேர்வாகவில்லை. 

ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ், வெனிசுலா, அமெரிக்கா, அங்கேரி, தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுதளின் அழகிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள்.

இவர்களில் அமெரிக்க அழகி ஆலிவியா கல்போ மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.  பிலிப்பைன்ஸ் அழகி ஜனினி துகோனோ 2-து இடமும், வெனிசுலா நாட்டு அழகி ஐரீனுக்கு 3-வது இடமும் கிடைத்தது. அவர்களுக்கு 2011-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ்  அழகி லோப்ஸ் கிரீடங்களை சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்