முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் இன்று இளவரசர் வில்லியம் திருமணம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன்,ஏப்.29 - சார்லஸ், டயானா தம்பதிகளின் மகனான இளவரசர் வில்லியம் அவரது நீண்ட நாள் காதலியான கேதரின் மில்டனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடக்கிறது. 

லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இங்கிலாந்து நேரப்படி பகல் 11 மணிக்கு திருமணம் நடக்கிறது. இந்த திருமண விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து 50 நாட்டு தலைவர்கள் உட்பட ஆயிரத்து 900 முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சி இங்கிலாந்து நேரப்படி காலை 8.15 நேரப்படி துவங்குகிறது. அப்போது முதல் விருந்தினர்கள் தேவாலயத்திற்கு வருவார்கள். 9.50 மணிக்கு பிரதமர் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் கவர்னர், ஜெனரல்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் வருவார்கள். 10.10 மணிக்கு இளவரசர் வில்லியம் தனது சகோதரர் ஹாரியுடன் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து தேவாலயத்திற்கு வருகிறார். 10.20 மணிக்கு மணமகள் கேத்தரின் தாயார், சகோதரர் ஆகியோருடன் தேவாலயத்திற்கு வந்து சேருவார். 10.35 மணிக்கு இளவரசர் சார்லசும், 10.40 மணிக்கு ராணி எலிசபெத்தும் தேவாலயத்தை வந்தடைவார்கள். 10.51 மணிக்கு மணமகள் கேத்தரின், தான் தங்கியிருக்கும் கோரிங் ஓட்டலில் இருந்து தனது தந்தையுடன் தேவாலயத்திற்கு வருவார். 11 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி 12.15 மணி வரை நடைபெறுகிறது. 12.15 மணிக்கு மணமக்கள் சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 12.30 மணிக்கு மணமக்கள் அரண்மனைக்கு வந்து சேர்வார்கள். 1.25 மணிக்கு மணமக்கள் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் அரண்மனை மாடத்தில் பொதுமக்களின் முன் தோன்றுவார்கள். இத்துடன் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெறும். திருமண நிகழ்ச்சிகள் டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் 200 கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்லஸ், டயானா திருமணத்தை உலகம் முழுவதும் 75 கோடி பேர் பார்த்தார்கள். அதை இந்த திருமண நிகழ்ச்சி முறியடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்