முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தேர்தல் முடிவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - காங்கிரஸ் கருத்து

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 18  - தமிழக தேர்தல் முடிவி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மதுரை மாநகர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ரா.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ரங்கசாமி தலைமையிலான அணி வென்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் அமைதியாகவும், மக்கள் அச்சமின்றியும் வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் கிடைத்த வெற்றி. மேற்கு வங்கமாநிலத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்திருக்கிறது. காங்கிரசை உள்ளடக்கிய மம்தாபானர்ஜியின்திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அசாமில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் மக்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியை காங்கிரஸ் அகற்றி உள்ளது.
    தமிழகத்தில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருந்த அபரிமிதமான கோபம் தான் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகளும் தோல்வியை தழுவி உள்ளன. புதிதாக அமைந்துள்ள அரசு மக்கள் நலனையும், வளர்ச்சியையும்,நடுநிலைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். சட்டத்தின் ஆட்சி சிறக்க வேண்டும்.தொடர்ந்து அரசியல் கடமையை ஜனநாயக வழியில் காங்கிரஸ் பாதையில் பயணித்து வென்றெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்