முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் நாட்டிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

சானா,பிப்.27 - எகிப்து,லிபியாவை அடுத்து ஏமன் நாட்டிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானார்கள் மற்றும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

எகிப்து நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருந்த முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது அதிபரின் முபாரக் உத்தரவை ராணுவம் மீறி செயல்பட்டது. இதனையொட்டி முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகினார். எகிப்தையடுத்து லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. எந்த நேரத்திலும் கடாபி,நாட்டை விட்டு ஓடும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதன் அண்டை நாடான ஏமனிலும் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருக்கும் அலி அப்துல்லா சாலெஹ் பதவியில் இருந்து விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மிகவும் கட்டுப்பாடு நிறைந்த ஏமன் தெற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் பகல் மற்றும் இரவு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இருதரப்பினர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள் மற்றும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு ஏமனில் இருக்கும் துறைமுக நகரான ஏதனில் வன்முறை தலைவிரித்தாடின. ராணுவத்தினருடன் ஆயிரக்கணக்கான மக்கள் மோதலில் ஈடுபட்டனர். போராடும் மக்கள் கலைந்து செல்ல வெடிமருந்துகளை போலீசார் வெடித்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மல்லா மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய ஏராளமானோர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்