முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகவேண்டும்-இளங்கோவன்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

குடியாத்தம்,ஜூன்.- 21 - தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பது பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,  தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உடனடியாக விலக வேண்டும் என பெரும்பான்மையான தொண்டர்கள் நினைக்கின்றனர். தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலே காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும். 2 ஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. விரைவில் அந்த வழக்கு முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில் குற்றவாளிகள் சேர்த்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில் அவசர கோலத்தில் அதன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இப்போதைய சூழலில் தலைமை செயலகம் நடத்த அந்த கட்டிடம் உதவாது. அந்த விஷயத்தில் கருணாநிதி புகார் கூறுவது குழந்தைத்தனமானது. கடந்த 2 மாதங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எடுத்த நடவடிக்கைகளுக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளிக்கவில்லை. புதிய தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்