முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்புக்குள் பிரதமர்: தி.மு.க

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.24 - பிரதமர் பொறுப்பில் உள்ளவரையும் லோக்பால் மசோதாவின் கீழ் விசாரிக்க வகை செய்ய வேண்டும் என்று தி.மு.க. கூறியுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் பதவியில் உள்ளவர்களையும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 

இந்நிலையில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கமான தி.மு.க.வும் பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது. இதே நிலைப்பாட்டை கொண்ட தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் இதே நிலையை தி.மு.க கூறியுள்ளது. இது கூட்டணியில் ஒருமித்த உடன்பாடு இல்லாததையே காட்டுகிறது. இந்த கருத்தை கூறியதுடன் லோக்பால் மசோதா குறித்த கருத்துக்களை நாடாளுமன்றத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தினார். தி.மு.க.வின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்