முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச ஊழலில் மகாராஷ்ட்ர போலீசாருக்கு ஐந்தாவது இடம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன் - 28 - லஞ்ச ஊழலில் இந்தியாவிலேயே மகாராஷ்ட்ர போலீசார் அகில இந்திய அளவிள் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். தேசிய குற்றவியல் பதிவுகள் துறை சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு காலத்தில் மிகச்சிறந்த நியாயமான போலீசாராக விளங்கிய மகாராஷ்ட்ரா போலீசார் இப்போது இந்தியாவிலேயே லஞ்ச ஊழலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2006 ம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளில் மட்டும்  மகாராஷ்ட்ரத்தில் போலீசாருக்கு எதிராக 21 ஆயிரம் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கைது செய்வது, காவலில் கைதி மரணம் ஆகியவை போன்ற பழைய வழக்குகள் உட்பட ஏராளமான புதிய  வழக்குகள் இவர்களுக்கு எதிராக தற்போது  உள்ளன. சமீபகாலத்தில் கற்பழிப்பு, மிரட்டி பணம் பறித்தல், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு, போலி என்கவுண்டர், பொய் வழக்குகள் போட்டு விசாரணையை திசை திருப்புவது போன்ற குற்றச்செயல்களில் மகாராஷ்ட்ர போலீசார் ஈடுபட்டு வருவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   அந்த அளவுக்கு மகாராஷ்ட்ர போலீசார்  லஞ்ச ஊழலில் திளைத்து இருக்கின்றனர். 

போலீசாருக்கு எதிரான வழக்குகளில் முதலிடம் வகிப்பது மத்திய பிரதேசம்தான். இம்மாநிலத்தில் மட்டும் போலீசாருக்கு எதிராக 93 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் (34,364), இதனையடுத்து டெல்லி (29,165), பஞ்சாப் (23,090) மாநிலங்கள் வருகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்