முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுகாத்தி ரயில் விபத்து பகுதியில் மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை12 - கவுகாத்தி ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிற்கிணங்க மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் முகுல் ராய் விரைந்தார். அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து ஒரிஸ்ஸா மாநிலம் பூரி நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததை அடுத்து அந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 50 பேர் படுகாயம்  அடைந்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடனே செல்லுமாறு மத்திய ரயில்வே உறை அமைச்சர் முகுல்ராய்க்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார்.

இதை அடுத்து அவர் உடனடியாக டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தில் புறப்பட்டு  சென்றார்.

முகுல்ராயை கவுகாத்திக்குச்  செல்லுமாறு பிரதமர் கட்டளையிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறின.

மம்தா தனது ரயில்வே துறை அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்ததை அடுத்து  அந்த இலாகாவை பிரதமரே  தனது பொறுப்பில் வைத்திருக்கிறார். அதனால் ரயில்வே இணை அமைச்சர் முகுல்ராயை கவுகாத்தி ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை வட கிழக்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு மற்றும் அதனை  தொடர்ந்து ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்தவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ரயில் விபத்தை தொடர்ந்து நேற்று  7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 விபத்துக்குள்ளான ரயிலின் எஞ்சிய பெட்டிகளும் பயணிகளும் நேற்று கவுகாத்திக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்